\
Chennai local trains get a super facility: Check out the full details
trainreuters

சென்னை மக்களே..வந்தாச்சு புது அப்டேட்! லோக்கல் ட்ரெயின்லயும் சூப்பர் வசதி..என்ன தெரியுமா?

சென்னையில் இயங்கும் மின்சார ரயில் வழித்தடத்தில், AC வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, எந்த வழித்தடத்தில் AC ரயில் இயக்கப்படவுள்ளது? எந்தெந்த ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

டிராஃபிக்கில் சிக்கும் சென்னை வாசிகளுக்கு மெட்ரோ ரயிலும், மின்சார ரயிலும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காரணம், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த இடத்துக்கு விரைவாகச் செல்ல முடியும் என்பதுதான். அப்படி, சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள புறநகர் ரயில் சேவையில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்தத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

train
trainreuters

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் சேவை அக்டோபர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 24-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்தச் சேவை இயக்கப்படும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அரக்கோணத்தைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயில் சேவைக்குப் பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பு, பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகு, இந்தச் சேவையைத் தொடர்ந்து இயக்குவது அல்லது விரிவுபடுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train
trainreuters

சென்னையின் புறநகர் ரயில் சேவையில், அரக்கோணம் வழித்தடத்திலும் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்படுவது பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

Chennai local trains get a super facility: Check out the full details
ஜந்தர் மந்தரில் போராட்டம்.. சிஜேபி தலைவர்கள் விடுதலை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com