சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து.. பயணிகள் அவதி

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து
மின்சார ரயில்கள் ரத்துpt

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேப் போன்று தாம்ரபரத்தில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து
48 நொடிகளில் 59 வகையான டைனோஸர்களின் பெயரை உச்சரித்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை மாணவன்!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் 4ஆவது வாரமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com