Accused
Accusedpt desk

சென்னை | மூதாட்டியை வெட்டிக் கொலை செய்து அடையாற்றில் வீசிய கொடூரம் - தம்பதியினர் கைது

சென்னையில், மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி வேலைக்கு சென்றபோது, மூதாட்டி காணாமல் போகவே, அவரது மகள் லோகநாயகி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விஜயாவை தேடி வந்தனர்.

Old women murder case
Old women murder casept desk

இந்நிலையில், விஜயாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி கடந்த 23 ஆம் தேதி காவல்துறையினர் அழைத்துள்ளனர். எனினும், பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவோடு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டனர்.

Accused
ரத்தப்புற்றுநோய் வந்தால் உடலில் என்ன நடக்கும்? சிகிச்சை என்ன? விளக்கும் மருத்துவர்!

விசாரணையில், மூதாட்டி விஜயாவை இருவரும் சேர்ந்து நகைக்காக துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை மூட்டைக்கட்டி அடையாற்றில் வீசியது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com