திடீரென தீப்பிடித்து எரிந்த கார் pt desk
தமிழ்நாடு
சென்னை | சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு. விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரன். இவர், தனது குடும்பத்தினரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக காவலர் குடியிருப்பில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எழும்பூர் மேம்பாலம் அருகே வலது புறம் திரும்ப காத்திருந்த நிலையில் திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காரில் இருந்தவர்களை உடனடியாக கீழே இறக்கியுள்ளார் இதையடுத்து இறங்கிய சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பாக்கம் தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. .இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்