சென்னை: வழக்கறிஞர் வீட்டுக் கண்ணாடியை துளைத்த துப்பாக்கி குண்டுகள்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கண்ணாடி நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிக் குண்டு
துப்பாக்கிக் குண்டுPT WEB

சென்னை அடுத்த மேற்குத் தாம்பரம் மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இன்று மாலை தியாகராஜன் மனைவி பிரியா, மகன் விஷால் மூன்று பேர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த திடிரென கண்ணாடி உடைந்து விழுந்ததுள்ளது. சத்தம் கேட்டு அவர்கள் வந்து பார்த்த போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், தாம்பரம் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

துப்பாக்கிக் குண்டு
13 வருடங்களாக குழந்தை இல்லை - விரக்தியில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
துப்பாக்கிக் குண்டு
துப்பாக்கிக் குண்டு

இதனைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கிக் குண்டு எந்த வகையைச் சேர்ந்தது? என்பது குறித்தும், குண்டு எங்கிருந்து வந்தது? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிக் குண்டு ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com