குரோம்பேட்டை MIT கல்லூரிpt desk
தமிழ்நாடு
சென்னை | குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனைக்குப் பின்பு புரளி என தகவல்
குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லூரிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல். சோதனைக்குப் பின்பு புரளி என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லூரிக்கு நேற்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கல்லூரி முகவரிக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட உடன் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் எம்.ஐ.டி கல்லூரியில் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதே போல் பலமுறை மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் ;பரபரப்பு ஏற்பட்டது.