முட்புதரில் கிடந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
முட்புதரில் கிடந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்pt desk

சென்னை: முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகே இரவு நேரத்தில் முற்புதர் பகுதியில் கிடந்த 3 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண் 01-ல் முரசொலி மாறன் மேம்பாலம் அருகிலுள்ள புதர் பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த சத்தத்தைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர்களான காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் புதர் பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பையில் குழந்தை துணியால் சுற்றிக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முட்புதரில் கிடந்த குழந்தை
முட்புதரில் கிடந்த குழந்தைpt desk

இதையடுத்து முற்புதரில் சிறிய காயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், பெரம்பூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தையை பரிசோதித்த போது, பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை என்பது தெரியவந்தது.

முட்புதரில் கிடந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
"தமிழக எல்லையில் கழிவுகளைக் கொட்டிய மருத்துவமனைகளை ஏன் மூடக்கூடாது?" - பசுமை தீர்ப்பாயம் கேள்வி

இதையடுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com