chennai airportpt desk
தமிழ்நாடு
மீண்டும் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ள சென்னை விமான நிலையம்...
சென்னை விமான நிலையம் மீண்டும் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு வர வேண்டிய சில விமானங்கள் பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மழை ஓய்ந்து வானிலை சீரடைந்துள்ளது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் அனைத்து விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
FlightTwitter
இந்நிலையில், ஜெர்மனி செல்லும் விமானம், 256 பயணிகளுடன் இன்று ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. நேற்று ரத்து செய்யப்பட்ட விமானங்கள் இன்று இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்கம் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.