செங்கல்பட்டு | நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்து..!
செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் வடக்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பாண்டியன். இவர், இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், இவர் வழக்கம்போல் இன்று அதிகாலை ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோவிலேயே தூங்கிக் கொண்டிருந்தார்
அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் கட்டுப்பட்டை இழந்து ஆட்டோ மீது மோதி உள்ளது. இதில், தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் மேலும் காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்