சென்னையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம் - 12 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்!

சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Dog bite
Dog bitept desk

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சிறுவன் வீட்டின் வெளியே சாலையில் சென்றுள்ளார். அப்போது இரண்டு வளப்பு நாய்கள சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Boy
Boypt desk

சென்னை கடந்த மாதம் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்து 5 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் வளர்ப்பு நாய்கள் கடித்து 12 வயது சிறுவன் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dog bite
அய்யய்யயோ ஆனந்தமே... எஞ்சாய் செய்யும் யானைகள்.. வனத்துறையின் அட்டகாசமான ஏற்பாடு!

இந்நிலையில், உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் காயமடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மொத்தம் நான்கு நாய்களும், ஒரு குட்டி என மொத்தம் 5 நாய்கள் இருந்த நிலையில், ஆக்ரோஷமான ராட் வைலர், பாக்ஸர் நாய்கள் வெளியே ஓடிவந்து சிறுவனை கடித்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் தெரிவித்த தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com