காலாவதியான மருத்துவப் பொருட்கள்
காலாவதியான மருத்துவப் பொருட்கள்pt desk

செங்கல்பட்டு | பாலாற்றின் கரையோரம் கொட்டப்படும் காலாவதியான மருந்துப் பொருட்கள்; பொதுமக்கள் அச்சம்!

பாலாற்று கரையோரம் காலாவதியான மாத்திரை மருந்து உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பழவேலி பாலாறு கரையோரம் செங்கல்பட்டு நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரித்து வருகிறது. இதனால் ஏற்கனவே இந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வரும் நிலையில், மர்ம நபர்கள் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரை உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை கரையில் கொட்டியுள்ளனர்.

காலாவதியான மருத்துவப் பொருட்கள்
பல்லடம் | அரசு மருத்துவமனையில் மின் தடை - செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம்

முழுமையாக எரிந்தும் எரியாமலும், பாதி எரிந்த நிலையிலும் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அயபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக மருத்து மாத்திரைகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com