செல்போன் லைட்டில் மருத்துவம்
செல்போன் லைட்டில் மருத்துவம்pt desk

பல்லடம் | அரசு மருத்துவமனையில் மின் தடை - செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம்

திருப்பூர் மாவட்டம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம். வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சரவணகுமார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் அவலம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மின்சார வசதி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவருக்கு செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போன் லைட்டில் மருத்துவம்
சேலம் | தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பாம்பு பிடி வீரரால் பரபரப்பு

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com