கைதாகி விடுதலையான நாதக வேட்பாளர் கார்த்திகேயன்.. மத்திய சென்னையில் நடந்தது என்ன?

சென்னையில் உள்ள ஒரு பூத்தில், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பாக, மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் ஜனநாயகப் பெருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கியது. 102 மக்களவைத் தொகுதிகளில், இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு பூத்தில், வாக்குப்பதிவு கோளாறு தொடர்பாக, மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து முழுத் தொகுப்பையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

கார்த்திகேயன்
மக்களவைத் தேர்தல்| Start.. Camera.. Action! நாம் தமிழர் கட்சியின் புதிய யுக்தி; தேர்தலில் எடுபடுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com