\
சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடுfile photo

சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு.. விரிவான விவரம் உள்ளே!

சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 16 முதல் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
Published on: 
Summary

சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 16 முதல் தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 46.3 லட்சம் மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2027ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தொடங்குவதற்கு 101 நாட்களுக்கு முன்பாகவே இது வெளியிடப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுகள் வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி காலை பத்தரை மணிக்குத் தொடங்குகின்றன.

cbse
cbsex page

பத்தாம் வகுப்பில் 83 பாடங்களுக்கும், பன்னிரண்டாம் வகுப்பில் 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 46.3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

நுழைவுத் தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும், மாணவர்களுக்குத் தகுந்த அவகாசம் கிடைக்கும் வகையிலும் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கால அட்டவணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிபிஎஸ்இ 2027 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
TNPSC குரூப்-4 தேர்வு : 6,574 காலிப்பணியிடங்களான அறிவிப்பாணை வெளியீடு.. தேர்வு எப்போது?