முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் போட்ட உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா
ஜெயலலிதாகோப்புப்படம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2016ம் ஆண்டு ஜெயலலிதா காலமானார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன்மூலம் வரும் பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதா
"தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை” - நீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, “நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்றியதற்கான செலவு தொகையாக 5 கோடி ரூபாயை தமிழக அரசு கர்நாடகாவுக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com