முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. திமுகவின் ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு!
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு செய்ததாக திமுகவின் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திமுக துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மீது முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆ. ராசா மீது 7 பிரிவுகளின் கீழும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 6 பிரிவுகளின் கீழும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், ஆபாசமாக பேசுதல், தனிநபர் குறித்து அவதூறாக பேசி பொது அமைதியை குலைக்க முற்படுதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளும் அடக்கம்.
இதேபோல், ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்து பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கை எதிர்கொள்ள தயார் என திமுக துணைப்பொதுச்செயலர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

