\
bagyalakshmi
bagyalakshmipt desk

சாதியை சொல்லி திட்டியதாக பட்டியலின பெண் பேரூராட்சி தலைவர் அளித்த புகார்: 3 பேர் மீது வழக்கு!

பூலாம்பாடி பேரூராட்சி பட்டியலின பெண் தலைவரை சாதி பெயரைச் சொல்லி மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அரும்பாவூர் போலிஸார் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் பாக்யலட்சுமி (40). கடம்பூரைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தேனூரைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமியின் வீட்டிற்குச் சென்று வீட்டுமனைப் பிரிவிற்கு அனுமதி வழங்கக் கோரி தகராறில் ஈடுபட்டதோடு, சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாக்யலட்சுமி புகார் அளித்திருந்தார்.

bagyalakshmi
ஒழுங்கா ப்ளாட் அப்ரூவல் கொடு, இல்ல: பேரூராட்சி பெண் தலைவரின் ஜாதி பெயரைச் சொல்லி மிரட்டியதாக புகார்
FIR copy
FIR copypt desk

இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட அரும்பாவூர் போலீசார், இதுகுறித்து விசாரணை செய்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து கடம்பூரைச் சேர்ந்த சதீஸ்குமார், ரெங்கநாதன் மற்றும் தேனூர் கிருஷ்ணண் ஆகிய மூன்று பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com