‘எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பார்த்தியா...’ கூகுள் மேப்பால் பாதை மாறிய கார்!

கூடலூரில் கூகுள் மேப் உதவியுடன் இயக்கப்பட்ட கார், நடைபாதை படிக்கட்டுகளில் சிக்கியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த சிலர், உதகைக்கு காரில் சுற்றுலா சென்றனர். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உதகை - கூடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் GOOGLE MAP செயலி உதவியுடன், ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார்.

கூகுள் மேப்பால் பாதை மாறிய கார்!
கூகுள் மேப்பால் பாதை மாறிய கார்! புதிய தலைமுறை

போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என மேப்பில் காட்டப்பட்ட பகுதி வழியாக காரை இயக்கியிருக்கிறார். அப்போது தவறான பாதையில் சென்றதால், பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை படிக்கட்டுகளில் கார் சிக்கியது.

கூகுள் மேப்பால் பாதை மாறிய கார்
“வன்மம் கலந்த நோக்கத்தில் சொல்லியிருக்கிறார் ஆளுநர்” - முதலமைச்சர் விமர்சனம்!

எனினும் இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின் காவல்துறையினரின் உதவியோடு கார் பத்திரமாக அப்பகுதியை கடந்துசென்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com