\
CM Vijay
CM VijayANI

இடைத்தேர்தல் முடிவு| பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி! - முதல்வர் விஜய்

இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றதை அடுத்து பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
Published on: 
Summary

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய், இது பெண்கள் மீதான அவதூறு பேச்சுகளுக்கு எதிரான வெற்றி என்றும், அரசியல் மற்றும் தனிமனித நாகரிகத்தின் வெற்றியாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாறிமாறி ஆண்டுவந்த அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் மக்கள் புறக்கணித்து புதியதாக வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை தேர்வுசெய்தனர்.

இந்த சூழலில் தவெக 107 இடங்களில் வெற்றிபெற்று தொங்கு சட்டசபை உருவான நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

TVK Cabinet Reshuffle Likely After Tamil Nadu Assembly Session
CM VijayANI

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. 5 மாத தவெக ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்ற கத்திமுனை தேர்தலாகவே தமிழக வெற்றிக்கழகம் இந்த இடைத்தேர்தலை சந்தித்தது.

இதனால் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்ட தமிழகத்தின் முதல்வர் விஜய் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். அதன் பலனாகவே இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அமோக வெற்றியை பதிவுசெய்துள்ளனர்.

CM Vijay
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.. 2 இடங்களிலும் வென்றது தவெக.. சட்டமன்றத்தில் உயரும் பலம்!

இந்தசூழலில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் முதல்வர் விஜய், இந்த வெற்றி பெண்கள் குறித்த அவதூறு பேச்சுக்களுக்கு எதிரான வெற்றி என கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.

மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி” என கூறியுள்ளார்.

CM Vijay
’பணநாயகத்தை நிராகரித்து ஜனநாயகம் வெற்றி’! - தவெக வெற்றிக்கு துரை வைகோ பாராட்டு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com