இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்வரிடம் பேனா வழங்கிய சிறுமி கோரிக்கை

இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்வரிடம் பேனா வழங்கிய சிறுமி கோரிக்கை
இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்வரிடம் பேனா வழங்கிய சிறுமி கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினிடம் பேனா ஒன்றை கொடுத்த 4 ஆம் வகுப்பு மாணவி, இதை கலைஞரின் நினைவிட்த்தில் வைத்து விடுங்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு முதல்வர் நெகிழ்ச்சியுற்றார்.

துமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார், இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா ஒன்றை கொடுத்துள்ளார்.

அப்போது அந்த மாணவியை வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்வர், அந்த மாணவியை வாழ்த்தி எதற்காக இந்த பேனா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட முதல்வர், சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி அனுப்பியுள்ளார். இது குறித்து சிறுமி கூறுகையில், முதல்வரை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது, என்னை நன்றாக படிக்கச் சொன்னார், நான் முதல்வரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com