தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்; இண்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு!

சென்னையில் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி புரளி என்றும், பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல் செயல்படும் எனத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் சின்ஹா - தனியார் பள்ளிகள்
பிரேம் ஆனந்த் சின்ஹா - தனியார் பள்ளிகள்PT WEB

சென்னையில் 13 தனியார்ப் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சென்னை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக பாரிமுனை, பூந்தமல்லி, பெரம்பலூர், எழும்பூர்,பூந்தமல்லி, சாந்தோம், கோபாலபுரம் என அடுத்தடுத்து 13 தனியார்ப் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து, தங்களுடைய பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் தனியார்ப் பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. இதில் ஒரு சில பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பும் அறிவிக்கப்பட்டது.

பிரேம் ஆனந்த் சின்ஹா
பிரேம் ஆனந்த் சின்ஹா

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பிரேம் ஆனந்த் சின்ஹா - தனியார் பள்ளிகள்
சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பதற்றத்தில் குவிந்த பெற்றோர்...

இச்சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, "சென்னை காவல் எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி. பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்.ஒரே இமெயிலில் இருந்து தான் அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த இமெயில் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது வரை 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்த மிரட்டல் காலை 10.30 மணி முதல் வர தொடங்கியது. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிரட்டல் வந்த இமெயிலில் எந்த ஒரு கோரிக்கையும் நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகள் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் மிரட்டல் வராத பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு முன்னதாக சென்னை எலியட்ஸ் கடற்கரை பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பொது மக்கள் பதற்றமடைய வேண்டாம்" என்றார்.

இண்டர்போல் உதவியை நாடும் சென்னை போலீசார் முடிவு!

மர்ம நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாததால், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் போலீஸ் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com