சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பதற்றத்தில் குவிந்த பெற்றோர்...

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. தொடர்ந்து குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர் பள்ளிகளில் அதிகளவில் ஒரேநேரத்தில் குவிந்துவருவதால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்புதிய தலைமுறை

சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி; பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளி; பெரம்பூர், எழும்பூர், சாந்தோம் பகுதிகளிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிகள்; கோபாலபுரம் செட்டிநாடு வித்தியாஸ்ரமம் போன்ற பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. தொடர்ந்து மேலும் சில பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கும் மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இதனால் அங்கெல்லாம் பரபரப்பு ஏற்பட்டது.

யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒரே நேரத்தில் இத்தனை பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தது, ஆசிரியர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததுடன் மாணவர்களை பள்ளி நிர்வாகம் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைக்கத் தொடங்கியது.

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவேற்காடு | அம்மன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடிய அர்ச்சகர்; பக்தர்கள் அதிர்ச்சி!

இதுபற்றி தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீஸார் மோம்பநாய்களின் உதவியுடன் அண்ணா நகர், ஜே.ஜே நகர் என வெடிகுண்டு மிரட்டல் வந்த பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் சோதனை நடத்தி வந்தனர்.

சோதனையின் முடிவில் இது வெறும் புரளி என்று தெரியவந்ததை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலிசார் தேடிவருகின்றனர். இதற்கிடையே பெற்றோர் அதிகளவில் பள்ளிகளில் குவிந்ததால் பரபரப்பே நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com