விமானம்
விமானம்எக்ஸ் தளம்

கிறிஸ்துமஸ்.. New Year | பண்டிகை காலத்தையொட்டி விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை காரணமாக விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
Published on

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை காரணமாக விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி, மதுரை, கொச்சி, மைசூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்ளூர் விமானங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்குச் செல்லவும் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமானக் கட்டணம் வழக்கமாக 4 ஆயிரத்து 796 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 14 ஆயிரத்து 281 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - மதுரை பயணத்திற்கு கட்டணம் 17 ஆயிரத்து 695 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து மதுரை செல்ல 4 ஆயிரத்து 300 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்னை - திருச்சிக்கு 14 ஆயிரத்து 387 ரூபாயாகவும், சென்னையிலிருந்து மைசூரு, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி செல்லவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் செல்லவும் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. விடுமுறை நாள்களில் விமானக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

உள்ளூர் விமானக் கட்டணங்கள்

சென்னை- தூத்துக்குடி ரூ. 14,281 (ரூ. 4,796 ப.கட்டணம்)

சென்னை – மதுரை ரூ. 17,695 (ரூ.4,300)

சென்னை -திருச்சி ரூ.14,387 (ரூ.2,382)

சென்னை – மைசூரு ரூ.9,872 (ரூ.3,432)

சென்னை – கோவை ரூ.9,418 (ரூ.3,485)

சென்னை – சேலம் ரூ.8,007 (ரூ.3,537)

சென்னை திருவனந்தபுரம் ரூ.13,306 (ரூ.3,821)

சென்னை -கொச்சி ரூ.18,377 (ரூ.3,678)

சர்வதேச விமான கட்டணங்கள்

சென்னை – சிங்கப்பூர் ரூ.16,861 (ரூ.7,510)

சென்னை – கோலாலம்பூர் ரூ.33,903 (ரூ.11,016)

சென்னை – தாய்லாந்து ரூ.17,437 (ரூ.8,891)

சென்னை- துபாய் ரூ. 26,752 (ரூ.12,871)

விமானம்
விமானக் கட்டணம் 60% உயர்வு : பயணிகள் அதிர்ச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com