கரூர்: குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஆண் சிசு – வீசிச் சென்றது யார்? போலீசார் விசாரணை

காவல்காரன்பட்டி பகுதியில் குப்பை தொட்டிக்குள் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் சிசு
குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் சிசுpt desk

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. இந்த சமுதாயக்கூடத்திற்கு அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சிலமணி நேரமேயான நிலையில், ஆண் சிசு சடலமாக கிடந்துள்ளது. இதனைக் கண்ட நாய்கள் கூட்டமாக நின்று சத்தமிட்டுள்ளன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர், அப்போது தொட்டிக்குள் பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை சடலமாக கிடந்தது.

Police station
Police stationpt desk
குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் சிசு
வேலூர்: குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த தாய் உட்பட 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், வடசேரி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் இறந்த ஆண் சிசுவை பார்வையிட்டு தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து குப்பைத் தொட்டியில் ஆண் சிசுவை வீசிச் சென்றது யார்? எதற்காக வீசிச் சென்றனர் என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தகவல் ஏதும் கிடைக்குமா என ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com