மின்சார ரயில்சேவை ரத்து
மின்சார ரயில்சேவை ரத்துweb

சென்னை ரயில் பயணிகளே கவனம்.. இன்று 5 ரயில்கள் ரத்து!

சென்னை ரயில் பயணிகளை பாதிக்கும் மற்றொரு அறிவிப்பாக சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 4 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

சூலூர்பேட்டை மற்றும் தடா இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமையான இன்று 5 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளுக்காக புற நகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டும், நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில்
மின்சார ரயில்கோப்புப்படம்

இந்தசூழலில் இன்று சென்னை ரயில் பயணிகளை பாதிக்கக்கூடிய மற்றொரு அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மின்சார ரயில்சேவை ரத்து
4 நாட்களில் வெப்பநிலை அதிகமாகும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

5 ரயில்கள் ரத்து.. 8 ரயில்கள் பகுதிநேர ரத்து!

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில், சூலூர்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில் சேவை ரத்து
மின்சார ரயில் சேவை ரத்துமுகநூல்

மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும் நான்கு ரயில்கள் எளாவூர் - சூலூர்பேட்டைஇடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூலூர்பேட்டையில் இருந்து புறப்படவேண்டிய நான்கு ரயில்கள் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே ரத்துசெய்யப்பட்டு, எளாவூரில் இருந்து இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.

மின்சார ரயில்சேவை ரத்து
எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி| கடற்கரை-தாம்பரம் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com