\
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் அடித்ததால் தப்பிய பணம்
Published on

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில ஆர்.எம்.ப்ளாசா என்ற வணிகவளாகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு இயங்கிவரும் எச்.டி.எப்.சி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார், ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொளளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com