சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்
சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்pt desk

பொம்மிடி அருணாச்சலேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் - 281 சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

பொம்மிடியில் அருணாச்சல ஈஸ்வரர் திருக்கல்யாண வைபவ விழாவில் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 281 சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்.
Published on

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பொம்மிடி சமேத ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாத பௌர்ணமி திதி நட்சத்திரத்தில் அருணாசல ஈஸ்வரர்- ஶ்ரீ உமாமகேஸ்வரி அம்பிகா திருக்கல்யாண வைபவவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவ விழாவிற்கு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் 281 சீர் வரிசைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்
சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்pt desk

இதையடுத்து சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்களை வரவேற்று, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்து முறைப்படி திருமணம் முடிந்தவுடன், பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தி சடங்குகளை செய்தனர். திருக்கல்யாண வைபவம் முடிந்தவுடன் மணமக்கள் கோயிலில் இருந்து இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர்.

சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்
தமிழக முதல்வர், துணை முதல்வர், ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது

முதன்முறையாக நடைபெற்ற, திருமண விழாவிற்கு இஸ்லாமியர்கள் 281 சீர்வரிசைகள் எடுத்து வந்தது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com