மேட்ரிமோனியல் மூலம் பழகி திருமண ஆசைக்காட்டி மோசடி: இளைஞருக்கு சிறை... என்ன நடந்தது?

திருமண செய்துகொள்வததாக சொல்லி எல்லை மீறிய பின் திருமணம் வேண்டாம் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த பிரசன்னா, தனது திருமணத்திற்காக பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்காக திருமண வரன் தேடும் இணையத்தில் தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர் குப்பத்தில் இருந்து அவருக்கு ஜாதகம் வந்துள்ளது. இருதரப்பிற்கும் இருவரையும் பிடித்துப்போக திருமண ஏற்பாடுகள் நடந்தது.

மணப்பெண்ணை தனிமையில் சந்தித்துப் பேசிய பிரசன்னா, ஒரு கட்டத்தில், திருமணம் வேண்டாம் என சொல்லியுள்ளார். இதனை அடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் பூந்தமல்லியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் பிரசன்னாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com