\
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
ஆம்ஸ்ட்ராங் படுகொலைமுகநூல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள புதூர் அப்பு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: 

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 28 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் 25 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீது சமீபத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
சென்னை | ஓடும் ரயிலில் விபரீத சாகசம்.. தூக்கி எறியப்பட்ட கல்லூரி மாணவர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக 28 ஆவது நபராக ரவுடி புதூர் அப்புவை செம்பியம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தற்போது புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com