விபத்தில் சிக்கிய மாணவர்
விபத்தில் சிக்கிய மாணவர்pt web

சென்னை | ஓடும் ரயிலில் விபரீத சாகசம்.. தூக்கி எறியப்பட்ட கல்லூரி மாணவர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

சென்னையில் ஓடும் ரயிலில் விபரீத செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Published on

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வருகிறார்.

இவர், கல்லூரி முடிந்த பின் தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயிலின் பட்டிக்கட்டில் தொங்கியபடி விபரீத செயலில் ஈடுபட்டபோது மின் கம்பத்தில் அடிபட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

விபத்தில் சிக்கிய மாணவர்
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த சில நாட்களில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

இதில் படுகாயம் அடைந்த மாணவர் அபிலாஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், அபிலாஷ் ரயிலில் பயணம் செய்தபோது விபரீத செயலில் ஈடுபடுவதும், அப்போது மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com