காதலர்கள் எடுத்த விபரீத முடிவு
காதலர்கள் எடுத்த விபரீத முடிவுpt desk

அரியலூர் | காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - காதலர்கள் எடுத்த விபரீத முடிவு

அரியலூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on

செய்தியாளர்: வெ.செந்தில் குமார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன் இவர், தனது மகள் திவ்யாவை, கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் இதையடுத்து கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த திவ்யா தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

Death
DeathFile Photo

இந்நிலையில் திவ்யா அதே பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி வேலை பார்க்கும் அன்பரசனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காத நிலையில், அன்பரசன் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தனியாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர் இதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அறிந்த அருகில் இருந்தவர்கள் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்

காதலர்கள் எடுத்த விபரீத முடிவு
சென்னை | கடன் தொல்லை காரணமாக மருத்துவர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.; மேலும் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com