மருத்துவக் கழிவுகள்pt desk
தமிழ்நாடு
அரியலூர்: மூட்டை மூட்டையாக ஓடையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகள் - அச்சத்தில் பொதுமக்கள்
அரியலூரில் மூட்டை மூட்டையாக ஓடையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகளை சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் பெரிய ஓடை செல்கிறது. இந்த ஓடையில் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டிக் கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுமோ என்று பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவக் கழிவுகள்pt desk
சுமார் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவு மூட்டைகளில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள், கையுரைகள், மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள், மருத்துவ அட்டை பெட்டிகள், மருந்துகள் என ஏராளமான கழிவுகள் காணப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்ட போது உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.