அமித்ஷா, அண்ணாமலை
அமித்ஷா, அண்ணாமலைpt web

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள்? "கூட்டணி அறிவிப்பை அதிமுகவிடம் ஒப்படைக்க முடியாது" - நடப்பது என்ன?

பாஜக தேசிய உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.
Published on

பாஜக தேசிய உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு, தமிழக தேர்தல் களம், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவும் முரண்பாடுகள் குறித்தும் கூட்டணியை விரிவாக்குவது தொடர்பாகவும் தமிழக தலைவர்களுடன் தேசிய தலைமை விவாதித்தது. இந்த கூட்டத்தில், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன்
நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன்x

அதிருப்தியில் பாஜக தலைமை!

தமிழ்நாட்டில் கூட்டணி குழப்பங்களால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாகவும், மேலும் மெகா கூட்டணி அமைக்கும் பொறுப்பை பாஜக கையில் எடுக்க வேண்டும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியை அமித் ஷா எப்போது உறுதிசெய்தாரோ அந்த நாளிலிருந்தே பாஜகவின் பழைய கூட்டாளிகளிடம் குழப்பங்கள் தொடங்கிவிட்டன. பாமகவுக்குள் நிலவும் சிக்கல், திசை மாறும் தேமுதிக, டிடிவி தினகரனின் விலகல், செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு என்பன போன்ற விவகாரங்களால் மோடி - ஷா குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன
பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்னமுகநூல்

இந்த நிலையில்தான் தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்கும் பொறுப்பை முழுமையாக அதிமுகவிடம் ஒப்படைத்துவிட முடியாது; அந்தப் பொறுப்பை பாஜக கையில் எடுக்க வேண்டும் என பாஜக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கேற்ப கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதோடு, மாறிவரும் சூழலுக்கேற்ப கூட்டணி வியூகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக பி.எல்.சந்தோஷிடம் ஆலோசனை செய்யுமாறும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அமித்ஷா, அண்ணாமலை
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன்.. அடுத்து என்ன?

தமிழக நிர்வாகிகளுக்கு அமித்ஷா-வின் அறிவுறுத்தல்..,

இக்கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியாகவும் ஆலோசனை நடத்தினார். அதில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பரப்புரையை விரைவில் தொடங்குவது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார். மேலும், தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை தீவிரப்படுத்தவும் அமித்ஷா வலியுறுத்தினார்.

தொடர்ந்து, கூட்டணி கட்சியினருடன் இணைக்கமாக செல்லவும், உட்கட்சி பூசல்களை களைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றவும் தமிழக பாஜக தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல் வெளியாகிவுள்ளன.

அமித்ஷா, அண்ணாமலை
பாஜக-வின் அடுத்தத் தலைவர்; பட்டியலில் இருக்கும் நான்கு பெயர்கள்.., ஆர்எஸ்எஸ்-ன் தாக்கம் இருக்குமா?

உயர்நிலைக் குழு கூட்டத்தை புறக்கணித்தாரா அண்ணாமலை ?

சமீபத்தில் தமிழகம் வந்த நிர்மலா சீதாராமன், கிண்டியில் வைத்து தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை பங்கேற்காத அந்த கூட்டத்தில், அண்ணாமலையின் வார் ரூம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், யாருக்கும் தனி மனித துதி பாடக்கூடாது என்று அண்ணாமலை குறித்து மறைமுகமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. பாஜகவில் தலைமை என்பது ஒருவருக்கானது இல்லை.. யார் வேண்டுமானாலும் மாறுவார்கள்.. கட்சிக்கே உழைக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை எச்சரித்ததாகவும் சொல்கின்றனர் கமலாலய வட்டாரத்தை நன்கறிந்தவர்கள். இந்த நிலையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்து அண்ணாமலை பங்கேற்காததன் பின்னணி என்ன? அண்ணாமலைக்கு அழைப்பு இல்லையா, அல்லது வந்த அழைப்பை நிராகரித்தாரா என்ற கேள்வி பாஜகவைத் தாண்டியும் விவாதப் பொருளாகியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை pt

இதுகுறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைப்பளு இருப்பதால் கூட்டத்துக்குச் செல்லவில்லை”என்று கூறினார். அண்ணாமலையின் இந்தப் பதில், விவாதத்தை மேலும் சூடாக்கியது. ஒரு கட்சியின் முன்னணித் தலைவர், தேசிய தலைமையின் அழைப்பைவிட, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த சூழலில், அண்ணாமலைக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பே இல்லை என்று ஒரு தரப்பும், “இல்லை; அண்ணாமலைக்கு அழைப்பு போனது; ஆனால், அவர் டெல்லி செல்வதைப் புறக்கணித்தார்” என்று பேசப்பட்டு வருகிறன்றது. இந்த நிலையில்தான் உட்கட்சி பூசலை களைந்து, அனைவரும் இணக்கமாக பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் பிரதமர் மோடியுடன் இந்த விஷயங்களை அமித் ஷா அடுத்த சில நாட்களுக்குள் விவாதிப்பார் என்றும் அதன் அடிப்படையில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com