வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் திருட்டுpt desk

ஆரணி | நெசவாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் திருட்டு!

ஆரணியில் நெசவாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் திருட்டு தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: புருஷோத்தமன்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் நெசவாளர் குணசேகரன் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு நெசவாளர் குணசேகரன் வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக குணசேகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குணசேகரன், ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் மூலம் போலீசார் வீடுகளில் சோதனை செய்தனர். சோதனையில் திருடர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்து 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 1.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் திருட்டு
சென்னை | போலியாக வழங்கப்பட்ட TC... பள்ளி மாணவர் மாயம் - பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு

இந்த திருட்டு குறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com