அதிமுக எம்எல்ஏ
அதிமுக எம்எல்ஏpt

அதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு!

ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அம்மன் அர்ஜுனன்
அம்மன் அர்ஜுனன்

அம்மன் அர்ஜுனன்ஏற்கனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக எம்எல்ஏ
காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவில் முக்கிய அம்சம் இதுதான்!

முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து அமைச்சர்களின் வீடுகளில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அம்மன் அர்ஜூனன் வீட்டிலும் ரெய்டு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com