பணியிட மாற்றம்
பணியிட மாற்றம் முகநூல்

காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவில் முக்கிய அம்சம் இதுதான்!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 11 காவல் அதிகாரிகள்!
Published on

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த பிருந்தா ஐ.பி.எஸ். உட்பட 11 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா ஐபிஎஸ், ஆவடி சிறப்புப்படை கண்காணிப்பாளரக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டாலியன் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன் ஐபிஎஸ், திருப்பூர் தெற்கு துணை ஆணையராகவும், மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார், போச்சம்பள்ளி பட்டாலியன் கண்காணிப்பாளராகவும், ஆவடி சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அய்யாசாமி சென்னை பட்டாலியன் கண்காணிப்பாளரகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம்
2ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்குத் தயாராகும் த.வெ.க., ஏற்பாடுகள் என்னென்ன?

அதேபோல், கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன், மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ், சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக எச். எம்.ஜெயராம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஷானாஷ், ஆர்.உதயக்குமார், என்.யு. ஸ்ரீனிவாசன், பி.சிபின் ஆகிய 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com