\
sand quarry
sand quarry file photo

திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடு வழக்கு! தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published on: 
Summary

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரின் வீட்டில், மணல் குவாரி முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணல் குவாரி முறைகேடு வழக்கில் திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில், 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தியதில், முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

கல் குவாரி
கல் குவாரிpt desk

இதுதொடர்பான வழக்கின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ரத்தினத்தின் 2ஆவது மகனும், திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான வெங்கடேஷ், திமுகவில் இருந்து அண்மையில் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

sand quarry
மணல்குவாரி முறைகேடு | 5 ஆட்சியர்கள் ED விசாரணைக்கு ஆஜர்... சம்பவத்தின் பின்னணி என்ன? முழு விவரம்!