\
Annamalai's Strategic Game Plan
annamalai web

ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை.. வீ த லீடர்ஸ் வியூகம் என்ன?

வீ த லீடர்ஸ் முதல் மாநாட்டை பிரம்மாண்ட அரசியல் மேடையாக மாற்றி, 2026–2031 தேர்தல் கணக்கில் தன்னை மாற்று தலைவராக முன்வைக்கும் அண்ணாமலையின் திட்டமிட்ட வியூகம்.
Published on

பொள்ளாச்சியில், வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டை நடத்தியுள்ள அண்ணாமலையின் பேச்சு தமிழ்நாட்டு அரசியலில் வலுவாக கால் பதிக்க விரும்பும் அவர் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. இதுகுறித்த சிறப்புச் செய்தியைப் பார்ப்போம்.

கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக, வீ த லீடர்ஸ் என்ற சமூக அமைப்பைக் கையில் எடுத்திருக்கும் அண்ணாமலை, அந்த அமைப்பின் முதல் மாவட்ட மாநாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டி நடத்தியுள்ளார்.

annamalai
annamalaiweb

வெறுமனே அமைப்பு மாநாடாக திட்டமிடாமல், 2026 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் பேசுபொருள்களில் ஒன்றாக இருந்த போதை ஒழிப்பு விஷயத்தை இந்த மாநாடு மையமாக கொண்டிருந்தது… போதைக்கு எதிராக அண்ணாமலை பேசும் ஒரு வரி ப்ரீத் மாநாட்டின் ஒவ்வோர் அம்சமும் தவெகவுக்கும், விஜய்க்கும் மாற்றாக அண்ணாமலையை முன்னிறுத்தும் நோக்கத்தை பட்டவர்த்தமாக வெளிப்படுத்தின.

தவெகவுக்கு மாற்றாக அதேசமயம் மூர்க்கமான எதிராளியாக அல்லாமல், ஆக்கபூர்வமான எதிர்சக்தியாக முன்னுறுத்திக்கொள்ளும் உத்தியை வெளிப்படுத்தினார் அண்ணாமலை. ஆனால், முதல்வர் விஜய்க்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளவும் 2031 தேர்தல் தமக்கான களமாக இருக்க வேண்டும் என்பதையும் ஆதரவாளர்களுக்கு சுட்ட அண்ணாமலை தவறவில்லை. 2031இல் மற்றுமொரு ஆட்சிமாற்றம் ஏற்படும், ஆட்சிக்கு வரவிருப்போர் படித்தவர்கள், நேர்மையானவர்கள்… அண்ணாமலையின் அரசியல் அவர் மீது பொதுவெளியில் விழுந்திருக்கும் சாதி – மத சாயத்துக்கும் இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பதில் அளித்தார்

சாதி, மதம் என்பது இந்த அமைப்புக்கு வெளியேதான் எனப் பேசும் பொது சமூகம் அண்ணாமலையையும், அவர் தொடங்கியுள்ள அமைப்பையும் என்னவாக மதிப்பிடுகிறது என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Annamalai's Strategic Game Plan
”உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி; குதிரை பேர குற்றச்சாட்டு” - மு. வீரபாண்டியன் கூறுவது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com