“தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் மட்டுமே தரமுடியும்” - அண்ணாமலை பேச்சு

“தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் தான் தரமுடியும். தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வரும் திமுகவிற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என அண்ணாமலை பேசினார்.
annamalai
annamalaipt desk

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அண்ணாமலை பேசிய போது, “கடந்த 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க-வை குறி வைத்து கோவையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

PM Modi
PM ModiPT Web

வியர்வை சிந்தியல்ல, ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தினால் மட்டுமே இவர்களது ஆன்மா சாந்தியடையும். 2-ஜி ஊழல் ஆ.ராசாவின் முகத்திரையை கிழித்து, நீலகிரி தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும்.

உலகில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிகப் பெரிய ஊழலை செய்தவர்களில் முதல் பத்து பேர் பட்டியலை புகழ் பெற்ற டைம் பத்திரிகை வெளியிட்டது. இதில் முதல் பெயர் ஜெனரல் கடாபி. இரண்டாவது நமது ஆ.ராசா என்பதை மறுக்க இயலுமா? மகளிர் உரிமை பற்றி பேசுபவர்கள் அவர்களுக்கு எதுவும் செய்வதில்லை. திமுக அமைச்சரவையில் இரு பெண்களுக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளனர். பா.ஜ.க மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கி பெண்களுக்கான உரிமையை கொடுத்துள்ளது.

annamalai
"மகளிர் இடஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் யதார்த்தத்தில் அமலுக்குவர பல ஆண்டுகள் பிடிக்கும்"-ப.சிதம்பரம்
cm stalin
cm stalinpt desk

‘திமுகவினர் ஆட்சிக்காக எதையும் செய்வார்கள், போலி இந்தி எதிர்ப்பு போராட்டக்கார்கள் நடத்துவார்கள்’ என்று பெரியாரே கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இனியும் ஊழலை கண்டு பொறுமையாக இருக்க இயலாது. திமுக ஆட்சியில் மகனும் மருமகனும் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார்கள். மூன்று தலைமுறை தாண்டி நான்காவது தலைமுறை ஊழலுக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கு மக்கள் இடமளிக்க கூடாது.

பெரும்பாலான இளைஞர்களும் பெண்களும் மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும் என விரும்புகிறார்கள். தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத அரசை பா.ஜ.க-வால் மட்டுமே வழங்க இயலும்' என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com