தமிழ்நாடு
“உதயநிதி UPSC-யில் பாஸ் பண்ணட்டும்; நான் அரசியலை விட்டு போய்விடுகிறேன்” அண்ணாமலை சவால்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் முதல் கட்ட பயணம் இன்றுடன் முடிவடைந்தது. நடைபயணம் மேற்கொண்டு 41 ஆவது தொகுதியான திருநெல்வேலியில் முதற்கட்ட பயணம் முடிவடைந்தது. அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஆளுநருக்கு சவால் விடுத்ததற்கு எதிர்கருத்து தெரிவிக்கும் விதமாக, “உதயநிதி யு.பி.எஸ்.சி-யில் முதல்நிலைத் தேர்வில் பாஸ் செய்யட்டும். நான் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுகிறேன்” என்றுள்ளார் அண்ணாமலை. இதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.