மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளுக்கு நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிவாரணம் குறித்து அண்ணாமலை பேசியிருக்கிறார்.