அண்ணா பல்கலைக்கழக வழக்கு | "குற்றவாளியை என்னிடம் ஒப்படைத்தால்.." - வீரலட்சுமி ஆவேசம்!
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்....
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பதிப்பகம் ஒன்று நடத்திய கூட்டத்தில் சீமான் தூண்டுதல் பேரில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இழிவு செய்தார். திண்டுக்கல் டிஐஜி வந்தித்தா பாண்டே குறித்து பெண் ஐபிஎஸ் என்றும் உயர் அதிகாரி என்றும் பார்க்காமல் ஊடகத்தில் இழிவாக பேசினார்.
கடலூரில் தந்தை பெரியார் சொன்னதாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பிய சீமான் மீதும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த அந்த பதிப்பகம் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழக வழக்கில் குற்றவாளியை என்னிடம் ஒப்படைத்தால் தலையை வெட்டி ஆணுறுப்பை அறுத்து வைப்பேன், பெண்களுக்காக குரல் கொடுப்பேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விஜயின் ரசிகை ஒருவர் 5 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவ உதவி செய்யுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டார்.
ஆனால், இதுவரை விஜய் தரப்பில் எந்த ஒரு உதவியும் செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் கவர்னர் போல் நடந்து கொள்கிறாரா? ஆளுநர் என்று பார்க்கிறேன் இல்லை ஏதாவது ஏடாகூடமாக பேசி விடுவேன்” என்று தெரிவித்தார்.