செந்தில் பாலாஜியை அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்.. மாநில அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்!
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001 - 2006 காலக்கத்தில் அதிமுகவில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்ட விரோத பண பறிமாற்றம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையத் தொடங்கியது. தொடர்ந்து, அதற்கடுத்த ஆண்டே, அதாவது, 2022-ம் ஆண்டில் 2.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள முடக்கியது அமலாக்கத்துறை.
தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், கடந்த திமுக அரசின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க திமுக தலைமையிலான திமுக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை. இந்தசூழலில் தான், தற்போது விஜய் தலைமையிலான தவெக தமிழகத்தில் அரசமைத்திருக்கும் நிலையில், தற்போது அந்த அரசுக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
ஏற்கனவே, சட்டவிரோத பணம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது மற்றுமொரு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழ்நாடு மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. 120 நாட்களுக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க கால அவகாசம் இருக்கும் சூழலில், அதன் பிறகே அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

