\
Anbil Mahesh Denied Anticipatory Bail in ₹100 Crore Scam Case
அன்பில் மகேஸ்ANI

100 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!

பள்ளிக்கல்வித்துறையில் 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: 

திமுக ஆட்சிக்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் , தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாக, கூறப்படுகிறது.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்Pt web

இந்தச்சூழலில் தான், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அன்பில் மகேஸ் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், இந்த வழக்கில் போலீசாரின் சம்மனை ஏற்று கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்காக காவல் துறையினர் முன் ஆஜரானதாகவும், எப்போது வேண்டுமானால் போலீஸ் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், காவல்துறை தரப்பில், குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை எனவும் இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு என வாதிட்டது. தொடர்ந்து, அன்பில் மகேஸுக்கு முன் ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளிவராது. அதனால், அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என வாதாடப்பட்டது.

இந்தச்சூழலில் தான், இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி வி.லட்சுமிநாராயணன், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது எனக் கூறியதை ஏற்று, அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Anbil Mahesh Denied Anticipatory Bail in ₹100 Crore Scam Case
வேட்டைக்காடாக தமிழ்நாடு; கோட்சூட் போடுவது மட்டும் முதல்வர் பணியல்ல - மு.க. ஸ்டாலின் விமர்சனம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com