CBSE
CBSE pt

3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் fail...? CBSE நடவடிக்கைக்கு அமைச்சர் எதிர்ப்பு!

3,5,8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் fail ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Published on

சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவு பெற்றநிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ சார்பில் கூறப்படுகிறது. இதனிடையே சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு போன்ற நடைமுறை தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

மேலும் தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி 8ம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை ஃபெயிலாக்கும் முறை சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெறும். அதேபோல் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “5 ஆம் வகுப்பு மாணவர்களை fail ஆக்கினால், இடைநிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. என்சிஆர்டி பாடங்கள் மூலம் வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

தொடக்கக் கல்வியில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த சூழலில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 5ஆம் வகுப்பில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை எனில் ஃபெயில் என்று அறிவித்தால் அந்த பெற்றோர்கள் எத்தகைய அழுத்தத்திற்கு ஆளாவர் என யோசித்துப் பார்க்க வேண்டும்.

5 வயது பிள்ளைக்கு என்னென்னு அட்வைஸ் பண்ணுவீங்க? அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை சட்டத்தின் படி, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இதனால்தான் உயர்க்கல்வியை வெற்றிகரமாக தாண்டி செல்கின்றனர். ஃபெயில் அன்று அறிவித்து நெருக்கடி கொடுத்தால் அவர்கள் கல்வி சிஸ்டத்தில் இருந்தே வெளியேறி சென்று விடுவார்கள்.

எனவே தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு குரலையாவது வெளிப்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என கையெழுத்து போடச் சொன்னால் எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.

CBSE
கள்ளக்குறிச்சி: “என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” - எனக் கூறிவிட்டு மாயமான இளம்தாய்!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம்தான் அறியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில் நாங்கள் கூறுவதைதான் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு செயல்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பேட்டியை, இங்கே காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com