பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பு

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்pt web

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகள் பிரச்சாரங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் காங்கிரஸ் தற்போது தனது கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கொண்டுவரப்பட்டார். சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத்தலைவராக எஸ். ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக ஊடக மற்றும் தகவல்தொடர்பு பிரிவுத்துறையின் மாநிலத் தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் வெளியிட்டுள்ளார். பொருளாதார நிபுநரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், தனிநபர் நிதிமேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தான் அளித்த நேர்காணல்கள் மூலம் பிரபலமடைந்தவர்.

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை புள்ளிவிவர அடிப்படையில் இவர் விமர்சித்து வந்த நிலையில், அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு காங்கிரஸ் கட்சி, மற்றும் பல்வேறு தரப்பினர் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com