\
கழுதை திருமணம்
கழுதை திருமணம்pt

’கழுதைகளுக்கு தாலி கட்டி திருமணம்..’ கோவையில் நடந்த சம்பவம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் பகுதியில் உள்ள லக்கேபாளையம் கிராமத்தில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
Published on
Summary

கோவையில் உள்ள கிராமத்தில் ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மழை பெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில், ‘பஞ்ச கல்யாணி’ பாரம்பரியப்படி சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தினர். பெண் கழுதைக்கு மணமகள் அலங்காரம், ஆண் கழுதைக்கு மணமகன் அலங்காரம் செய்து, மேளதாளம், பூஜையுடன் தாலி கட்டி, கம்பங்கூழ் வழங்கி மழையை எதிர்நோக்குகின்றனர்.

கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக போதிய மழை பெய்யாததால் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன், ‘பஞ்ச கல்யாணி’ என்ற பாரம்பரிய நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

கழுதை திருமணம்
கழுதை திருமணம்

அதன்படி, சுப்பிரமணியர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு புடவை, வளையல், பாசி அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி மணமகள் போல் அலங்கரிக்கப்பட்டது. கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மேளதாளம் முழங்க, பூஜைகள் நடத்தப்பட்டு பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மறுவீடு அழைப்பும் நடத்தப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது. கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

கழுதை திருமணம்
’என்னை கொலை பண்ணிடுங்க..’ கெஞ்சி கேட்ட ஜி.பி.முத்து! தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com