மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மூர்த்தி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மூர்த்தி pt web

மதுரையைக் குறிவைக்கும் பாஜக.. முக்கியமான இரண்டு தொகுதிகளுக்கு டார்கெட்?

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
Published on

செய்தியாளர் மணிகண்டபிரபு

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாpt web

அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, மகேஸ்வரி என மேற்கு தொகுதியில் மட்டும் 6 நிர்வாகிகளை சந்திக்கிறார். அதேபோல திமுக அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து வெற்றி பெறும் மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளான மாவட்ட துணைத்தலைவர் சித்ராதேவி, வெற்றி செல்வி, மாவட்ட செயலாளர்கள் மணிமேகலை, ஜெயந்தி உள்ளிட்ட 4 நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மூர்த்தி
IND A v ENG A| கேஎல் ராகுல் அசத்தல் சதம்.. முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் அடித்த இந்தியா!

மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா அதிகம் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதாகவும், 1,10,000வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விஜய் முதல்வராவார் என தவெகவினர் போஸ்டர் ஒட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்திமுகநூல்

திமுக தரப்பில் மதுரை மேற்கு தொகுதியையும் கைப்பற்ற அமைச்சர் மூர்த்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அமித்ஷா நிர்வாகிகளை அதிகளவில் சந்திக்க உள்ளது கவனம் பெற்றுள்ளது. மதுரையில் கடந்த 1ம் தேதி திமுக பொதுக்குழுவை நடத்தும் பொறுப்பை அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் வழங்கியிருந்தார். சிறப்பாக பொதுக்குழு நடத்த அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்ததாக முதல்வர் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். திமுகவின் தென்மண்டலத்தில் வலிமை மிக்கவராக மூர்த்தி பார்க்கப்படும் நிலையில் அவரது வெற்றித்தொகுதியான கிழக்கிலும் பாஜக பார்வைபட்டுள்ளது அரசியல் கவனத்தை பெற்றுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் மூர்த்தி
பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு.. போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்.. கடுமையாகச் சாடிய கிரண் பேடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com