இளைஞர் உயிரிழப்புpt desk
தமிழ்நாடு
ஆம்பூர் | மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், அதே பகுதியில் உள்ள அவர்களது நிலத்தில் இரும்பு கொட்டகை அமைத்து வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இரும்பு கொட்டகையில் மின்விளக்கு பொருத்தும் பணியில் வெங்கடேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
DeathFile Photo
உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.