ஆம்பூர்: தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகும் பாலாறு – பொதுமக்கள் போராட்டம்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாக பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால், மாராப்பட்டு பகுதியில் பாலாறு நுரை பொங்கி ஓடுகிறது.
இதையடுத்து பாலாற்றில் தோல் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தனர்.
இருப்பினும் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது தொடர் கதையாகி வருவதால், இன்று மீண்டும் பாலாறு நுரைபொங்கி ஓடியதால், தோல் தொழிற்சாலைகளை கண்டித்து, பொதுமக்கள், பாலாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.